மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டி நூலாக அமையும் என்ற நோக்கத்தில் அறிவியல் பரிசோதனை பயிற்றி எனும் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டின் அறிவியல் கலைத்திட்டத்தின் அடிப்படையில் பத்து பரிசோதனைகள் இப்புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எளிய முறையில் அறிவியல் பரிசோதனையைத் திறம்படப் புரிந்து கொண்டு மேற்கொள்வதற்குப் பெரிதும் துணைப்புரியும். மேலும், இப்புத்தகத்தில் அறிவியல் பரிசோதனை அறிக்கையைச் சரியான முறையில் எழுதுவதற்கான வழிமுறையும் மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் வண்ணம் உயர்நிலை சிந்தனைத் திறன் கேள்விகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் மாணவர்களின் தர அடைவு நிலையை நிர்ணயிப்பதற்கும் மாணவர்கள் அறிவியல் பாடத்தில் ஆர்வத்தையும் புரிதலையும் அதிகரிக்க இப்புத்தகம் பெரிதும் பங்காற்றும் என நம்புகிறோம்.
Science Experiment Book is a book produced as a guideline for Science teachers in all SJK (Tamil) schools in Malaysia in conducting Science experiments in schools. The book has been produced in two languages, Tamil and English, to simplify and to assist teachers to conduct 10 experiments listed in the DSKP for each standard from Standard 1 to Standard 6. We hope this book will provide further understandings to both students and teachers on how to carry out an experiment in school more effectively. This book also provides a guide on writing a science experiment report to both students and teachers. HOTS questions have been included in this book to expose students on this type of question and to guide them on how to answer the questions more effectively. We hope this book will serve as a guide students and teachers in achieving a better outcome in their PBD assessment and enhance their interest and understanding in Science.
ஆண்டு 1 / Year 1
ஆண்டு 2 / Year 2
ஆண்டு 3 / Year 3
ஆண்டு 4 / Year 4
ஆண்டு 5 / Year 5
ஆண்டு 6 / Year 6